Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை சமாளிக்க அதிகரிக்கப்பட்ட மீட்பு படகுகள்

புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை சமாளிக்க அதிகரிக்கப்பட்ட மீட்பு படகுகள்

By: Nagaraj Sun, 11 Dec 2022 10:21:31 AM

புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை சமாளிக்க அதிகரிக்கப்பட்ட மீட்பு படகுகள்

பிரான்ஸ்: பிரான்ஸ் கடலோர காவல்படை முன்னோடியில்லாத நடவடிக்கை என்று விபரிக்கும் வகையில் இரண்டு கூடுதல் கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பிரித்தானியாவை அடைய முயலும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை சமாளிக்க, ஆங்கில கால்வாயில் மீட்பு படகுகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் கடலோர காவல்படை முன்னோடியில்லாத நடவடிக்கை என்று விபரிக்கும் வகையில் இரண்டு கூடுதல் கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

coastguard,france,britain,increase,rescue boat ,கடலோரக்காவல்படை, பிரான்ஸ், பிரித்தானியா, அதிகரிப்பு, மீட்பு படகு

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டிங்கியில் கடக்க முயன்ற 27 பேர் நீரில் மூழ்கிய சம்பவத்திற்கு பிறகு பிரான்ஸ் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த ஆண்டு 40,000க்கும் அதிகமானோர் இத்தகைய ஆங்கில கால்வாயை கடந்துள்ளனர். இது ஒரு சாதனை எண்ணிக்கை ஆகும்.

லேபரௌஸ் ஆய்வுக் கப்பல் கலேஸ் துறைமுகத்திற்கு வந்துவிட்டது. கெர்மோர்வன் ரோந்துக் கப்பல் அடுத்த சில நாட்களில் அங்கு இருக்கும் என்று பிரான்ஸ் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

குறித்த இரு கப்பல்களும் அனுப்பப்படுவது கால்வாய்-வடக்கடல் பகுதியில் கடலோரக் காவல்படையின் மீட்புத் திறனை வலுப்படுத்தும் என நம்பப்படுகின்றது.

Tags :
|