Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்காவிடில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம்; பிரதமரின் உதவியாளர் எச்சரிக்கை

மக்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்காவிடில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம்; பிரதமரின் உதவியாளர் எச்சரிக்கை

By: Nagaraj Sun, 24 May 2020 12:20:11 PM

மக்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்காவிடில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம்; பிரதமரின் உதவியாளர் எச்சரிக்கை

மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிடில் கொரோனா பரவல் கடுமையாக உயரும் அபாயம் இருக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில், 52 ஆயிரத்து, 437 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து, 653 பேர், குணமடைந்துள்ளனர். இதுவரை, 1,101 பேர், பலியாகி உள்ளனர். கடந்த, 24 மணி நேரத்தில், 34 பேர் பலியாயினர்.

danger,corona,isolation,people,alarm ,அபாயம், கொரோனா, தனிமைப்படுத்தல், மக்கள், எச்சரிக்கை

இதுகுறித்து, பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர், ஸபர் மிர்ஸா கூறுகையில், ''வைரஸ் தொற்று குறித்து, கடந்த வார அறிக்கை திருப்திகரமாக இல்லை. தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் ஒழுங்காக பின்பற்றாவிட்டால், வரும் வாரங்களில், தொற்று எண்ணிக்கை, கடுமையாக உயரும் அபாயம் உள்ளது,'' என்றார்.

இந்நிலையில் கராச்சி மத்திய சிறையில் உள்ள, 300 கைதிகளுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு, 400 கைதிகள் வரை, தனிமைப்படுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதே நிலைமை தொடர்ந்தால், இடப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.மேலும், 20 போலீஸ் அதிகாரிகள் மற்றும் சிறை ஊழியர்களுக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :
|
|
|