Advertisement

தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகரிப்பு

By: Monisha Fri, 23 Oct 2020 2:35:46 PM

தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகரிப்பு

தோவாளையில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் குமரி, நெல்லை, மதுரை, தேனி, தர்மபுரி, சேலம் உள்பட பல மாவட்டத்தில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. பூக்கள் சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்படும்.

தற்போது ஆயுத பூஜைக்கு இன்னும் இரண்டு தினங்களே இருப்பதால் தோவாளை பூ மார்க்கெட் களை கட்டியுள்ளது. வழக்கத்துக்கு மாறாக வெளியிடங்களில் இருந்து அதிக அளவிலான ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட கலர் பூக்கள் வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

கடந்த சில நாள்களாக பூக்களின் வரத்து அதிகரித்துள்ளன. சாதாரணமாக தினமும் 10 டன் பூக்கள் வரும். ஆனால், நேற்று முன்தினம் 25 டன், நேற்று 30 டன் பூக்கள் மார்க்கெட்டில் வந்து குவிந்தன. இங்கு இன்றும், நாளையும் பூக்கள் வரத்து அதிகரிக்கும் என தெரிகிறது.

flowers,market,puja,rose,jasmine ,பூக்கள்,மார்க்கெட்,ஆயுத பூஜை,ரோஜா,மல்லிகை

அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தோவாளை மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை விபரம் கிலோவில் வருமாறு:-

பிச்சி ரூ.400, மல்லிகை ரூ.600, முல்லை ரூ. 350, சம்பங்கி ரூ.300, கனகாம்பரம் ரூ. 600, வாடாமல்லி ரூ.100, துளசி ரூ.40, தாமரை (100 எண்ணம்) ரூ. 500, கோழிப்பூ ரூ.60, பச்சை ஒரு கட்டு ரூ. 7 , ரோஜா (100 எண்ணம்) ரூ.30, பட்டன் ரோஸ் ரூ.150, ஸ்டெம்பு ரோஸ் (1 கட்டு) ரூ.200, மஞ்சள் கேந்தி ரூ. 55, சிவப்பு கேந்தி ரூ.60, சிவந்தி மஞ்சள் ரூ.120, வெள்ளைச் சிவந்தி ரூ.270, கொழுந்து ரூ.120, மருக்கொழுந்து ரூ.150 என விற்பனை செய்யப்பட்டது.

Tags :
|
|
|