Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கையில் சீனவை முந்தியது

பாகிஸ்தானில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கையில் சீனவை முந்தியது

By: Monisha Fri, 05 June 2020 10:25:49 AM

பாகிஸ்தானில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கையில் சீனவை முந்தியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 66.92 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

coronavirus,pakistan,china,death toll,number of impacts ,கொரோனா வைரஸ்,பாகிஸ்தான்,சீனா,பலி எண்ணிக்கை,பாதிப்பு எண்ணிக்கை

தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்து 264 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சீனவை முந்தியது பாகிஸ்தான். கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 801 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மேலும் கொரோனாவுக்கு 82 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,770 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

Tags :
|