Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; புதிதாக 146 பேருக்கு பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; புதிதாக 146 பேருக்கு பாதிப்பு

By: Monisha Sat, 18 July 2020 3:03:37 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; புதிதாக 146 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு அதிகம் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை கொண்ட மாவட்டமாக சென்னை உள்ளது. சென்னையை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.

கொரோனாவின் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக 146 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் சிகிச்சைக்காக அரசு, தனியார் மற்றும் முகாம்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

thiruvannamalai,corona virus,infection,death,treatment ,திருவண்ணாமலை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

திருவண்ணாமலையை சேர்ந்த 61 வயது மூதாட்டி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, கடந்த 14-ந்தேதி சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல் திருவண்ணாமலையை சேர்ந்த 50 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 15-ந்தேதி சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆரணி அரசு மருத்துவமனை சாலையில் கல்லரை தெருவை சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையிலும், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவ கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டிலும் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags :
|