Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா பரிசோதனைகள்- சுகாதாரத்துறை தகவல்

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா பரிசோதனைகள்- சுகாதாரத்துறை தகவல்

By: Monisha Mon, 30 Nov 2020 09:56:37 AM

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா பரிசோதனைகள்- சுகாதாரத்துறை தகவல்

புதுச்சேரி யூனியனில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தது. இதன் காரணமாக கடந்த இரண்டு மாதமாக அங்கு கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதுச்சேரியில் இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தியாறு பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

புதுச்சேரியில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 926 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 72 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று இறப்பு எதுவும் இல்லை. மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 4 லட்சத்து 323 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3 லட்சத்து 59 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டது. 36 ஆயிரத்து 935 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

pondicherry,corona,test,increase,health ,புதுச்சேரி,கொரோனா,பரிசோதனை,அதிகரிப்பு,சுகாதாரத்துறை

புதுவையில் தற்போது 480 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 178 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 302 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 35 ஆயிரத்து 846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 609 பேர் பலியாகி உள்ளனர். இதில் 499 பேர் புதுச்சேரியையும், 59 பேர் காரைக்காலையும், 44 பேர் ஏனாமையும், 7 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 10 நாட்களாக இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. உயிரிழப்பு 1.66 சதவீதமாகவும், குணமடைவது 97.05 சதவீதமாகவும் உள்ளது. இந்த தகவலை புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|