Advertisement

அதிகரிக்கும் கொரோனா.. இன்றைய நிலவரம்..

By: Monisha Sat, 09 July 2022 9:05:58 PM

அதிகரிக்கும் கொரோனா.. இன்றைய நிலவரம்..

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று வீரியமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18,840 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த 16,104 பேர் குணமடைந்துள்ளனர்.இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. கடந்த சில நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் விதிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

corona,increasing,safe,distance ,கொரோனா, தொற்று,இந்தியா,மத்திய அரசு,

அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 43 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 5,25,386 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

Tags :
|
|