Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈரானில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 3,574 பேருக்கு தொற்று உறுதி

ஈரானில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 3,574 பேருக்கு தொற்று உறுதி

By: Monisha Fri, 05 June 2020 12:04:56 PM

ஈரானில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 3,574 பேருக்கு தொற்று உறுதி

ஈரானில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்று கடந்த பிப்ரவரி மாதத்தில் உறுதி செய்யப்பட்டது. பின்னர் மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் உச்சம் அடைந்தது. அக்காலகட்டத்தில் கடும் பாதிப்பை எதிர்கொண்ட ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் தொற்று எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. ஆனால் ஈரானில் தொற்று அதிகரித்து வருகிறது.

ஈரானில் கடந்த மார்ச் 30-ம் தேதி 3,186 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் அதிகபட்ச அளவாக 3,574 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த நான்கு தினங்களாக தொற்று எண்ணிக்கை 3,000க்கும் மேலாகப் பதிவாகியுள்ளது.

iran,coronavirus,corona testing,iran department of health ,ஈரான்,கொரோனா வைரஸ்,கொரோனா பரிசோதனை,ஈரான் சுகாதாரத் துறை

இதுகுறித்து ஈரானின் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் கூறியதாவது:-

ஈரானில் தற்போது கொரோனா பரிசோதனை அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படுகிறது. அதன் காரணமாகவே தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மற்றப்படி, இரண்டாம் கட்டப் பரவலின் காரணமாக அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 59 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நிலையில் கொரோனா பலி எண்ணிக்கை 8,071 ஆக உயர்ந்துள்ளது. 8.18 கோடி மக்கள்தொகை கொண்ட ஈரானில் இதுவரையில் 1,64,270 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :
|