Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாராவியில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று: மக்கள் அச்சம்

தாராவியில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று: மக்கள் அச்சம்

By: Monisha Sat, 23 May 2020 10:36:32 AM

தாராவியில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று: மக்கள் அச்சம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ஊரடங்கு, பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

coronavirus,india,maharashtra,mumbai,dharavi ,கொரோனா வைரஸ்,இந்தியா,மகாராஷ்டிரா,மும்பை,தாராவி,பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1478 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. இடம் நெருக்கடியான தாராவியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.

Tags :
|
|