Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான தேவை அதிகரிப்பு

சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான தேவை அதிகரிப்பு

By: Nagaraj Tue, 07 Feb 2023 00:00:24 AM

சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான தேவை அதிகரிப்பு

புதுடெல்லி: சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான தேவை அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ மற்றும் ஜிஎஸ்எல்வி ஏ ராக்கெட் மூலம் 4,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடியும். சர்வதேச விண்வெளி சந்தையில் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான தேவை அதிகரித்துள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, சிறிய ஜிஎஸ்எல்வி-கள் குறைந்த எடையுள்ள செயற்கைக்கோள்களை (500 கிலோ வரை) குறைந்த புவி சுற்றுப்பாதையில் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

india,isro,space, ,இந்தியா, இஸ்ரோ, விண்வெளி, எஸ்.எஸ்.எல்.வி., தோல்வி

இஸ்ரோ புதிய ராக்கெட்டுகளை வடிவமைத்து வருகிறது. இதன் எடை 120 டன். இதற்கான செலவு ரூ.30 கோடிக்குள் இருக்கும். அதன்படி, 2 சிறிய செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி-டி1 ராக்கெட் ஆகஸ்ட் 7ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

ஆனால் ராக்கெட்டின் சென்சார் பழுதடைந்து செயற்கைகோள்கள் தவறான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதால் திட்டம் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து புதிய ராக்கெட் உருவாக்கப்பட்டு ஏவப்படும் என எஸ்எஸ்எல்வி இஸ்ரோ அறிவித்தது.

Tags :
|
|
|