Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து மக்களவை காலவரையரையின்றி ஒத்திவைப்பு

மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து மக்களவை காலவரையரையின்றி ஒத்திவைப்பு

By: vaithegi Fri, 11 Aug 2023 2:48:42 PM

மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து மக்களவை காலவரையரையின்றி ஒத்திவைப்பு

இந்தியா: மக்களவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ... நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 10 நாட்களுக்கு மேலாக இரு அவைகளும் முடங்கின. மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிக்கட்சிகள் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில், மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இத்தீர்மானம் கடந்த 08ம் தேதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

lok sabha,monsoon session no ,மக்களவை ,மழைக்கால கூட்டத்தொடர் ந


இதையடுத்து இத்தீர்மானத்தின் போது காங்கிரஸ் எம்.பிக்கள் கௌரவ் கோகோய், ராகுல் காந்தி உள்ளிட்டோர் கார சார விவாதத்தை முன்வைத்தனர். இத ந்நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மக்களவையில் நேற்று பிரதமர் மோடி பதிலுரை வழங்கினார். பிரதமர் மோடியின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், தீர்மானம் தோல்வியடைந்தது.

இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு அடைந்ததை தொடர்ந்து மக்களவை காலவரையரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்து உள்ளார். இன்றைய கூட்டத்தொடரில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்டங்களில் இந்திய என்ற வார்த்தையை பாரதிய என்று மாற்றுவதற்கு சட்டத்திருத்தம் மக்களவையில் தாக்கல் செய்தார்.

Tags :