Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகளில் சுதந்திரத் திருநாள் போட்டிகள் ..அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை

பள்ளிகளில் சுதந்திரத் திருநாள் போட்டிகள் ..அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை

By: vaithegi Sat, 30 July 2022 4:43:01 PM

பள்ளிகளில் சுதந்திரத் திருநாள் போட்டிகள் ..அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை

இந்தியா: இந்தியாவில் ஆண்டுதோறும் அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்பட்டு சுதந்திர தினத்தை பற்றிய முக்கியத்துவம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது.

இதை அடுத்து இந்த ஆண்டு 75வது சுதந்திர தினம் என்பதால் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 13, 14, 15-ம் தேதிகளில் அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், பேருந்துகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

schools,competitions,independence day ,பள்ளிகள் ,போட்டிகள் ,சுதந்திரத் திருநாள்

மேலும் பள்ளிகளில் சுதந்திரத் திருநாள் அமுதடப் பெருவிழா வினாடி வினா போட்டிகள் சார்பான கடிதம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் போட்டிகள் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்ற மாணவர்களின் விவரங்களை இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் முதன்மைக்கல்வி அலுவலரின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதனை அடுத்து பள்ளிகளில் மாணவ மாணவியர்கள் அந்த போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :