Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா - சீனா சுமார் 1 லட்சம் ராணுவ வீர்களை எல்லையில் குவித்துள்ளது

இந்தியா - சீனா சுமார் 1 லட்சம் ராணுவ வீர்களை எல்லையில் குவித்துள்ளது

By: Nagaraj Wed, 14 Oct 2020 08:59:24 AM

இந்தியா - சீனா சுமார் 1 லட்சம் ராணுவ வீர்களை எல்லையில் குவித்துள்ளது

எல்லைப்பகுதியில் இந்தியா, சீனா ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியாவும், சீனாவும் தங்களது பகுதிகளில் சுமார் 1 லட்சம் ராணுவ வீரர்களை குவித்துள்ளது. குறிப்பாக சீனா தனது பகுதியில் 60 ஆயிரம் ராணுவ வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

கடந்த மே மாதம் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியது முதல் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து போர் பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தின.

china,india,troop concentration,war tension ,சீனா, இந்தியா, வீரர்கள் குவிப்பு, போர் பதற்றம்

இதுவரை இரு நாடுகளுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தை நடந்து பிறகும் எல்லை பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை. கடந்த 12ம் தேதியன்று இந்திய எல்லை பகுதிக்குள் அமைந்துள்ள சுஷுலில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்ற 7வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அன்று மதியம் 12 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தை எந்தவிதமான முடிவுகள் எட்டப்பட்டதா என்பது குறித்து விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. இதற்கிடையே எல்லை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் மங்கி உள்ளதால், எல்லையில் இரு தரப்பும் வீரர்களை குவித்துள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியாவும், சீனாவும் தங்களது பகுதியில் சுமார் 1 லட்சம் வீரர்களை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல். இதனால் எல்லையில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவுகிறது. கடந்த ஆகஸ்ட் 30ம் தேதியன்று ரெக்சின் லா, ரெசாங் லா மற்றும் முக்பரி ஆகிய மலை உச்சிகளில் இந்திய ராணுவம் தனது நிலைகளை வலுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|