Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தான் பற்றி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பற்றி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா குற்றச்சாட்டு

By: Nagaraj Thu, 27 Aug 2020 08:21:53 AM

பாகிஸ்தான் பற்றி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா குற்றச்சாட்டு

பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து பிராந்திய நாடுகளுக்கு பாகிஸ்தான் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

ஐநாவால் தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் பலர் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ள இந்தியா, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக பாதுகாப்பு கவுன்சிலில் குற்றம் சாட்டியுள்ளது.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள் தொடர்பான ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் விவாதக் கூட்டம் கடந்த திங்களன்று நடந்தது. இந்நிலையில், இதில் உறுப்பு நாடாக பாகிஸ்தான் இல்லாத நிலையில், ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் முனீர் அக்ரம், விவாதத்தில் பங்கேற்றதாக தவறான தகவலை பாகிஸ்தான் வெளியிட்டிருந்தது.

pakistan,extremists,threat,india,indictment ,பாகிஸ்தான், தீவிரவாதிகள், அச்சுறுத்தல், இந்தியா, குற்றச்சாட்டு

இதுகுறித்து ஐநா சபைக்கு இந்தியா எழுதியுள்ள கடிதத்தில், பாதுகாப்புக் கவுன்சிலில் உறுப்பு நாடுகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், பாகிஸ்தான் தூதர் எந்த விவாதத்தில் பங்கேற்றார் என்பது தெரியவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் கூறுவது அனைத்தும் பொய் என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தினால் இந்தியாவே பெரும் பாதிப்புக்கு உள்ளான நிலையில், தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கூறுவது உண்மையல்ல என கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவதாகவும், ஐநாவால் தடை விதிக்கப்பட்ட பல பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ள இந்தியா, 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தீவிரவாதிகள் தங்கள் நாட்டில் இருப்பதாக இம்ரான்கான் ஒப்புக்கொண்டுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து பிராந்திய நாடுகளுக்கு பாகிஸ்தான் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

Tags :
|
|