Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எங்கள் கோரிக்கையை இந்தியா ஏற்றது; பிரதமர் மகிந்த ராஜபக்ச தகவல்

எங்கள் கோரிக்கையை இந்தியா ஏற்றது; பிரதமர் மகிந்த ராஜபக்ச தகவல்

By: Nagaraj Sun, 12 July 2020 2:26:20 PM

எங்கள் கோரிக்கையை இந்தியா ஏற்றது; பிரதமர் மகிந்த ராஜபக்ச தகவல்

எங்கள் கோரிக்கையை இந்தியா ஏற்றுக் கொண்டது. மத்தளை விமான நிலையத்தை இந்தியா செயற்படுத்த மாட்டாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹம்பான்தோட்டையில் நடைபெற்ற பிரசார கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்து உள்ளதாவது:

ஹம்பான்தோட்டை அருகே எனது கிராமத்தில் உள்ள மத்தளை சர்வதேச விமான நிலையம் ந‌‌ஷ்டத்தில் இயங்கி வந்தது.

mattala,airport,india,suitable,prime minister ,மத்தளை, விமான நிலையம், இந்தியா, ஏற்றது, பிரதமர்

அந்த விமான நிலையத்தை இலங்கையுடன் சேர்ந்து இயக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் கடந்த 2018-ம் ஆண்டு சிறிசேன-ரணில் விக்ரமசிங்க அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், நானும், என் சகோதரர் கோட்டாபய ராஜபக்சவும் இந்தியாவுக்கு சென்றிருந்தபோது, மத்தளை விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பை ஏற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். எங்கள் வேண்டுகோளை இந்தியா ஏற்றுக்கொண்டது. அதனால்தான், விமான நிலையத்தை காப்பாற்ற முடிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|