Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவும், சீனாவும் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - ரஷியா

இந்தியாவும், சீனாவும் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - ரஷியா

By: Karunakaran Fri, 13 Nov 2020 08:05:22 AM

இந்தியாவும், சீனாவும் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - ரஷியா

கடந்த மே மாதம் முதல் லடாக் எல்லையில் இந்திய, சீனா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தை தணிக்க பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும் சுமூகமான நிலை ஏற்படவில்லை. இரு நாடுகள் இடையே சுமூக நிலை ஏற்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷிய துணைத்தூதர் ரோமன் பாபுஸ்கின் நேற்று இணையவழியில் பேட்டி அளித்தபோது, ஆசிய கண்டத்தின் இருபெரும் நாடுகளான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. அது எங்களுக்கு இயல்பாகவே கவலை அளிக்கிறது என்று தெரிவித்தார்.

india,china,tensions,russia ,இந்தியா, சீனா, பதட்டங்கள், ரஷ்யா

எனவே, இரு நாடுகளும் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.இரு நாடுகளும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் ஆகிய அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளன. இதுபோன்ற பன்னாட்டு அமைப்புகளில் ஒத்துழைக்க வேண்டி இருக்கும்போது, பேச்சுவார்த்தைதான் நல்ல வழிமுறை என ரஷிய துணைத்தூதர் கூறினார்.

மேலும் அவர், உலகம் முழுவதும் நிச்சயமற்ற தன்மை நிலவி வரும்போது, இந்தியா-சீனா இடையிலான பதற்றம், இந்த பிராந்தியத்தில் ஸ்திரமற்ற தன்மையை உண்டாக்கி விடும். மேலும், பிற நாடுகள் இதை தங்களது அரசியல் ஆதாயத்துக்காக தவறாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது. சமீபத்தில், இரு நாடுகளும் சுயகட்டுப்பாட்டை கடைப்பிடிக்க முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம் ஆகும் என்று கூறினார்.

Tags :
|
|