Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா- சீனா எல்லை பிரச்னையில் பேச்சுவார்த்தையை தொடர இருநாடுகளும் முடிவு

இந்தியா- சீனா எல்லை பிரச்னையில் பேச்சுவார்த்தையை தொடர இருநாடுகளும் முடிவு

By: Nagaraj Sun, 07 June 2020 2:00:05 PM

இந்தியா- சீனா எல்லை பிரச்னையில் பேச்சுவார்த்தையை தொடர இருநாடுகளும் முடிவு

பேச்சுவார்த்தையை தொடர முடிவு... இந்தியா - சீனா இடையே எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், அமைதி நிலவச் செய்யவும் ராணுவ, வெளியுறவு அதிகாரிகள் இடையான பேச்சு வார்த்தையை தொடர்வது என இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.

இந்தியா - சீனா இடையே உள்ள எல்லையில் கிழக்கு லடாக்கில் கால்வன் பள்ளத்தாக்கில் ராணுவக் கண்காணிப்பை இந்தியா அதிகரித்துள்ளது. சீனாவும் அப்பகுதியில் படையினரைக் குவித்துள்ளதால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், எல்லைச் சிக்கலுக்குப் பேச்சுக்கள் மூலம் தீர்வு காண விரும்புவதாக இருநாட்டு வெளியுறவு அதிகாரிகளும் தெரிவித்தனர்.

speech,border,problem,officials,foreign ministry ,பேச்சு வார்த்தை, எல்லை, பிரச்னை, அதிகாரிகள், வெளியுறவு அமைச்சகம்

இதையடுத்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் சீனப்பகுதியில் உள்ள மால்டோ என்னுமிடத்தில் நேற்று இருநாட்டு ராணுவ அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் இந்தியா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் தலைமையிலான குழுவினரும், சீனா சார்பில் மேஜர் ஜெனரல் லையு லின் தலைமையிலான குழுவினரும் கலந்துகொண்டனர்.

அப்போது கிழக்கு லடாக்கில் முன்பிருந்த நிலையைப் பராமரிக்க வேண்டும் என இந்தியக் குழுவினர் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தை நிறைவடைந்ததும் இந்தியக் குழுவினர் லே பகுதிக்குத் திரும்பினர்.

speech,border,problem,officials,foreign ministry ,பேச்சு வார்த்தை, எல்லை, பிரச்னை, அதிகாரிகள், வெளியுறவு அமைச்சகம்

இந்நிலையில், எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், அமைதி நிலவச் செய்யவும் ராணுவ, வெளியுறவு அதிகாரிகள் இடையான பேச்சுவார்த்தையை தொடர்வது என இருநாடுகளும் முடிவு செய்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் படி அமைதியான முறையில் பேசித் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் உடன்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இருநாடுகளிடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தி 70 ஆண்டுகள் ஆவதையொட்டி, உறவை மேலும் மேம்படுத்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.

Tags :
|
|