Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்த கொரோனா மருந்து பரிசோதனைக்கு இந்தியா அனுமதி

ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்த கொரோனா மருந்து பரிசோதனைக்கு இந்தியா அனுமதி

By: Nagaraj Tue, 04 Aug 2020 10:02:52 AM

ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்த கொரோனா மருந்து பரிசோதனைக்கு இந்தியா அனுமதி

ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்த மருந்தின் 2, 3ஆம் கட்ட பரிசோதனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய பட்டியலின்படி, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மருந்தாகக் குறைந்தது 165 தடுப்பூசிகள் உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதில் சில மனிதர்களுக்குச் செலுத்தி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன என்பது தெரியவந்தது. ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளின் அனைத்து கட்டங்களும் நிறைவடைந்ததாகவும், அக்டோபர் முதல் மக்களுக்குச் சிகிச்சை அளிக்க இருப்பதாகவும் ரஷ்யா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘கோவாக்சின்’ தடுப்பூசி’ நாடு முழுவதும் 12 மருத்துவமனைகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்த மருந்தின் 2, 3ஆம் கட்ட பரிசோதனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது.

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அந்நாட்டு அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை உருவாக்கியது. இதனை மனிதர்களுக்குச் செலுத்தி விரைவில், நோயாளிகளுக்குச் செலுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

corona,vaccine,oxford,research,academy ,கொரோனா, தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு, ஆராய்ச்சி, அகாடமி

இம்மருந்து இங்கிலாந்தில் 2 , 3ஆம் கட்டத்திலும், பிரேசிலில் 3ஆவது கட்டத்திலும், தென் ஆப்பிரிக்காவில் 1, 2ஆம் கட்டத்திலும் சோதனையில் உள்ளது. இந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்க செரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா என்ற மிகப்பெரிய மருந்து நிறுவனம் உரிமை பெற்றுள்ளது. இதன் முதற்கட்ட பரிசோதனை இந்தியாவில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட சோதனைக்காக டிசிஜிஐ அமைப்பிடம் செரம் நிறுவனம் அனுமதி கோரியிருந்தது.

அதன்படி, இம்மருந்தின் 2 மற்றும் 3ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ), புனேவின் செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுக்கு (எஸ்ஐஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

COVID-19 தொடர்பான ஆய்வு நடத்த அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டதாகச் சுகாதார அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் முதல் டோஸ் தடுப்பூசியும், 4 வார இடைவெளி விட்டு 29ஆவது நாளில் 2ஆவது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டு சோதனை நடைபெறவுள்ளது

தேர்ந்தெடுக்கப்பட்ட 17 நகரங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,600 பேர் பரிசோதனைகளில் பங்கேற்கவுள்ளனர். எய்ம்ஸ் டெல்லி, எய்ம்ஸ் ஜோத்பூர், புனேவில் உள்ள பி ஜே மருத்துவக் கல்லூரி, பாட்னாவில் உள்ள ராஜேந்திர மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் , சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி முதுகலை நிறுவனம், கோரக்பூரில் உள்ள நேரு மருத்துவமனை, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர மருத்துவக் கல்லூரி, மைசூரில் உள்ள ஜேஎஸ்எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி ஆகியவற்றில் சோதனை நடைபெறவுள்ளது.

Tags :
|
|