Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷியாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா

உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷியாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா

By: Karunakaran Tue, 07 July 2020 1:46:52 PM

உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷியாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. தற்போது இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா காரணமாக இதுவரை 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் 3-வது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. 3-வது இடத்தில் இருந்த ரஷியாவை பின்னுக்கு தள்ளியுள்ளது.

russia,global corona,corona prevalence,india ,ரஷ்யா, உலகளாவிய கொரோனா, கொரோனா பாதிப்பு, இந்தியா

முதல் இடத்தில் அமெரிக்காவும், 2-வது இடத்தில் பிரேசிலும் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இருப்பினும் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் 4 லட்சத்து 24 ஆயிரத்து 432 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 693 ஆக அதிகரித்து இருக்கிறது.

நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. நேற்று இந்தியாவில் 24 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று ஒரே நாளில் 425 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

Tags :
|