Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதை குறை கூற முடியாது

குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதை குறை கூற முடியாது

By: Nagaraj Thu, 23 Feb 2023 11:19:01 AM

குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதை குறை கூற முடியாது

ரஷ்யா: இந்தியாவை குறை கூற முடியாது... ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கும் முடிவிற்கு இந்தியாவைக் குறை கூற முடியாது என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.

உக்ரைன் போர் தொடங்கப்பட்டதில் இருந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் பல நாடுகள் அதை நிறுத்தி விட்டன. இருப்பினும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருகிறது.

இந்நிலையில்தான் குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவை குறை கூற முடியாது என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.

ambassador philip ackerman,russia,oil,india,germany ,தூதர் பிலிப் அக்கர் மேன், ரஷ்யா, எண்ணெய், இந்தியா, ஜெர்மனி

இதுகுறித்து பேசிய இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன், ரஷ்யா, உக்ரைன் மோதலுக்கு தீர்வு காண்பதற்கு இந்தியா பொருத்தமான நாடு என்று குறிப்பிட்டார்.

ஆனால் தற்போதைய சூழ்நிலை அவ்வாறு இல்லை எனவும், போரை நிறுத்த இந்தியா பேச்சு நடத்துமானால் அதனை இரு நாடுகளும் கேட்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என அக்கர்மேன் குறிப்பிட்டார்.

Tags :
|
|
|