Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்லையில் இருந்து படைகளை முழுமையாக வாபஸ் பெற இந்தியா-சீனா சம்மதம்

எல்லையில் இருந்து படைகளை முழுமையாக வாபஸ் பெற இந்தியா-சீனா சம்மதம்

By: Nagaraj Sat, 25 July 2020 1:18:48 PM

எல்லையில் இருந்து படைகளை முழுமையாக வாபஸ் பெற இந்தியா-சீனா சம்மதம்

படைகளை முழுமையாக வாபஸ் பெற சம்மதம்... இருதரப்பு உறவுகள் எந்த சிக்கலுமின்றி அதிகரிக்கும் வகையில், கட்டுப்பாட்டு எல்லையில் இருந்து படையினரை முழுமையாக வாபஸ் பெற இந்தியாவும், சீனாவும் சம்மதித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் விரைவில் படையினரை திரும்ப அழைத்துக் கொள்ள இரு நாடுகளும் முழுமனதுடன் சம்மதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

forces,consent,statement,boundary,withdrawal ,படைகள், சம்மதம், அறிக்கை, எல்லை, திரும்பப் பெற

இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் அளவில் நடந்த பேச்சு வார்த்தைகளில் எடுக்கப்பட முடிவுகளை நடைமுறைப்படுத்தவும் சீனா முன்வந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் தேதி இருநாட்டு சிறப்பு பிரதிநிதிகள் தொலைபேசி வழியாக விவாதித்து எடுத்த முடிவுகளின் அடிப்படையில் எல்லையில் இருந்து ராணுவம் திரும்பப் பெறப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூத்த ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|