Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா- சீனா இடையே ராஜீய மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை

இந்தியா- சீனா இடையே ராஜீய மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை

By: Nagaraj Thu, 20 Aug 2020 6:47:38 PM

இந்தியா- சீனா இடையே ராஜீய மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தைகள்... கிழக்கு லடாக்கில் 3 மாதங்களாக நீளும் எல்லைப் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு கட்டமாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ராஜீய மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெறுகிறது.

எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு செயல்திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில் , படைகளை விரைவில் வாபஸ் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து இருதரப்பும் விவாதிக்கும் என கூறப்படுகிறது.


china,stubbornness,india,negotiation,leadership ,சீனா, பிடிவாதம், இந்தியா, பேச்சுவார்த்தை, தலைமை

காணொலியில் நடக்கும் இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில், இந்திய தரப்பிற்கு வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்காசிய பிரிவு இணைச் செயலாளர் நவீன் ஸ்ரீவாத்சவா தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக கடந்த மாதம் 24 ஆம் தேதி இதைப்போன்ற ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பின்னர் இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை கடந்த 2 ஆம் தேதி நடத்தப்பட்டாலும், பதற்றமான பகுதிகளில் இருந்து படைகளை விலக்காமல் சீனா பிடிவாதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|