Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா-சீனா இடையே ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

இந்தியா-சீனா இடையே ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

By: Karunakaran Tue, 14 July 2020 12:14:01 PM

இந்தியா-சீனா இடையே ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ந் தேதி இந்தியா சீனா ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் சுமார் 40 பேர் பலியாகினர். இதனால் எல்லை பகுதியில் போர் மூளும் பதற்றம் நிலவியது.

எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பின், கடந்த மாதம் 30-ம் தேதி ராணுவ கமாண்டர்கள் மடத்தில் நடந்த 3-வது கட்ட பேச்சுவார்த்தையில் எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெற இரு நாடும் ஒப்புக்கொண்டது.

india-china,ladakh border,military commander,negotiated ,இந்தியா-சீனா, லடாக் எல்லை, இராணுவத் தளபதி, பேச்சுவார்த்தை

தற்போது லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக மீண்டும் இந்தியா-சீனா இடையே ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது. கிழக்கு லடாக்கில் உள்ள சு‌ஷுல் பகுதியில், இந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிங்கர் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் படைகளை விலக்கி கொள்வது குறித்து இருதரப்பும் தீவிர ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிங்கர் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை குறைத்துக்கொள்வது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ராணுவம் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :