Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளவில் புதிய தொற்று பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடம்

உலகளவில் புதிய தொற்று பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடம்

By: Monisha Mon, 24 Aug 2020 09:58:24 AM

உலகளவில் புதிய தொற்று பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடம்

சீனாவில் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கொரோனா நோய் தொற்று தற்போது இந்தியா, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69 ஆயிரத்து 239 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 24 மணி நேரத்தில், அமெரிக்காவில் 32 ஆயிரம் பேருக்கும், பிரேசிலில் 23 ஆயிரம் பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona virus,infection,death,treatment,india ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை,இந்தியா

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 66 லட்சத்து 90 ஆயிரத்து 145 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 694 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நோய் தொற்று பாதிப்பில் இருந்து 1 கோடியே 60 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் விபரம் வருமாறு:-
அமெரிக்கா - 58,74,146
பிரேசில் - 36,05,783
இந்தியா - 30,44,940
ரஷியா - 9,56,749
தென் ஆப்பிரிக்கா - 6,09,773
பெரு - 5,94,326
மெக்சிகோ - 5,56,216
கொலம்பியா - 5,41,147
ஸ்பெயின் - 4,07,879
சிலி - 3,97,665

Tags :
|