Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிலநடுக்கத்தால் பாதித்த சிரியாவுக்கு உதவும் வகையில் மருந்து பொருட்கள் வழங்க இந்தியா முடிவு

நிலநடுக்கத்தால் பாதித்த சிரியாவுக்கு உதவும் வகையில் மருந்து பொருட்கள் வழங்க இந்தியா முடிவு

By: Nagaraj Tue, 07 Feb 2023 9:22:08 PM

நிலநடுக்கத்தால் பாதித்த சிரியாவுக்கு உதவும் வகையில் மருந்து பொருட்கள் வழங்க இந்தியா முடிவு

டெல்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு உதவும் வகையில் மருந்து பொருட்களை இந்தியா அனுப்ப முடிவு செய்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று ( அதிகாலை ஏற்பட்ட பூகம்பம் அந்நாடுகளை நிலைகுலைய செய்துள்ளது. இதுவரை 3,400-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. பனி உள்ளிட்ட தடங்கல்கள் வந்தாலும், இரவு முழுவதும் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

துருக்கியில் இடிந்த 5,606 கட்டிடங்களில் குடியிருப்பாளர்கள் நிறைந்த பல மாடி அடுக்குமாடி கட்டிடங்களும் அடங்கும். காசியான்டேப் சிரியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.

help,india,syria, ,இந்தியா, உதவி, சிரியா, மருந்து பொருட்கள், சரக்கு விமானம்

அதனால் துருக்கி, சிரியா இரண்டு நாடுகளுமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது .

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு உதவும் வகையில் மருந்து பொருட்களை இந்தியா அனுப்ப முடிவு செய்துள்ளது. மருந்து பொருட்கள் விமானப்படையின் சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் சரக்கு விமானத்தில் அனுப்பப்படுகிறது.

Tags :
|
|
|