Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிழக்கு லடாக் எல்லையில் படைப்பலத்தை அதிகரித்த இந்தியா

கிழக்கு லடாக் எல்லையில் படைப்பலத்தை அதிகரித்த இந்தியா

By: Nagaraj Wed, 16 Nov 2022 6:41:13 PM

கிழக்கு லடாக் எல்லையில் படைப்பலத்தை அதிகரித்த இந்தியா

புதுடில்லி: கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்தியா தனது படைபலத்தையும் உள்கட்டுமானத்தையும் அதிகரித்துள்ளது.

450 பீரங்கிகளை நிறுத்தும் வகையிலும் கூடுதலாக 22 ஆயிரம் வீரர்களைக் குவிக்கும் வகையிலும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சீனாவை எதிர்கொள்ள ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதற்கான இரண்டு மையங்களை இந்தியா அமைத்துள்ளது.

india,force,construction,increase,ladakh frontier region ,இந்தியா, படைபலம், கட்டுமானம், அதிகரிப்பு, லடாக் எல்லைப்பகுதி

இதன் மூலம் எல்லையில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வதும் பொருட்களை எடுத்துச் செல்வதும் எளிதாகும். தாக்குதல் நடத்தக்கூடிய ஹெலிகாப்டர்கள் இங்கு ஒரு நேரத்தில் 12 வீரர்களை அழைத்துச் செல்லும். 3டி பிரிண்டட் தற்காப்பு சாதனங்களும் முதன்முறையாகப் பரிசோதித்து நிறுவப்பட்டுள்ளன.

சீனாவின் படைக்குவிப்புகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்தியா தனது படைபலத்தையும் உள்கட்டுமானத்தையும் அதிகரித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

Tags :
|
|