Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா – பிரான்ஸ் இடையில் சிறந்த வடிவில் உறவு: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியா – பிரான்ஸ் இடையில் சிறந்த வடிவில் உறவு: பிரதமர் மோடி பெருமிதம்

By: Nagaraj Thu, 13 July 2023 8:06:42 PM

இந்தியா – பிரான்ஸ் இடையில் சிறந்த வடிவில் உறவு: பிரதமர் மோடி பெருமிதம்

பாரீஸ்: இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான உறவு சிறந்த வடிவில் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரான்ஸ் சென்றுள்ளார். அதிபர் மக்ரோனை நேரில் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்த உள்ளார். இந்த நிலையில், லெஸ் எக்கோஸ் என்ற பிரான்ஸ் நாளிதழுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான உறவு சிறந்த வடிவில் உள்ளது.

அது வலிமையாகவும், நம்பிக்கை மற்றும் உறுதியாகவும் உள்ளது. கடுமையான புயல் சூழலிலும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு நிலையாகவும் மற்றும் உறுதி தன்மையுடனும் இருந்து வருகிறது. வாய்ப்புகளை எதிர்நோக்கி இருக்கும்போது துணிவுடனும் மற்றும் இலக்குடனும் செயல்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

engagement,international law,modi,pride,two nations, ,இரு நாடுகள், ஈடுபாடு, சர்வதேச சட்டம், பெருமிதம், மோடி

பரஸ்பர நம்பிக்கையின் அளவு மற்றும் நாம் பகிர்ந்து கொண்டுள்ள நம்பிக்கை ஈடு இணையற்றது. பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் தொலைநோக்கு பார்வை ஆகியவற்றில் இருந்து அது நிலை கொண்டு உள்ளது. செயல்திட்டம் சார்ந்த சுயாட்சியுடனான ஒரு வலிமையான உணர்வை நாம் பகிர்ந்து இருக்கிறோம்.

சர்வதேச சட்டத்தில் இரு நாடுகளும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு உள்ளது. பன்முக தன்மையில் இரு நாடுகளும் அசைக்க முடியாத நம்பிக்கையை சுமந்து செல்கின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags :
|
|