Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா திறன்வாய்ந்த மனித சக்தி, மூலப்பொருட்களை கொண்டுள்ளது - நிதின் கட்கரி

இந்தியா திறன்வாய்ந்த மனித சக்தி, மூலப்பொருட்களை கொண்டுள்ளது - நிதின் கட்கரி

By: Karunakaran Sun, 05 July 2020 2:17:24 PM

இந்தியா திறன்வாய்ந்த மனித சக்தி, மூலப்பொருட்களை கொண்டுள்ளது - நிதின் கட்கரி

கொரோனா வைரஸ் காரணமாக உலக பொருளாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு பின், இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இந்தியா சுயசார்பு நாடாக திகழ வேண்டும். மற்ற நாடுகள்தான் இந்தியாவை எதிர்நோக்கி இருக்கி வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

லடாக் எல்லைக்கு மோதலுக்குப் பின் சுயசார்பு நாடு என்ற குரல் வலுத்து வருகின்றன. மேலும் லடாக் எல்லைக்கு மோதலுக்குப் பின் சீனாவின் 59 செயலிகள் ரத்து மற்றும் சீனாவின் பங்கீடுகள் ரத்து போன்ற சுயசார்பு அதிகரித்துள்ளது.

nitin gadkari,raw materials,manpower,india ,நிதின் கட்கரி, மூலப்பொருட்கள், மனிதவளம், இந்தியா

பெரும்பாலான உற்பத்திக்கான மூலப்பொருட்கள் சீனாவில் இருந்து வருவதால், இந்தியா இதை எப்படி சமாளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், இந்தியா மிகப்பெரிய மார்க்கெட்டை பெற்றுள்ளது. திறன்வாயந்த மனிதசக்தி உள்ளது. மூலப்பொருட்கள் கிடைக்கிறது. அதிக வேலைவாய்ப்பு மற்றும் வறுமையை ஒழிக்க அரசு வளர்ச்சி மற்றும் தொழில்சார்பில் கவனம் செலுத்துவதாக கூறினார்.

மேலும் அவர், பிலிப் தலைநகரில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்ட முதலீட்டார்கள் மாநாடு கூட்டத்தில், பெரும்பாலான முதலீட்டார்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்ததாகவும், இந்தியாதான் முதலீடு செய்ய பாதுகாப்பான இடம் என்று கூறியதாகவும் நிதின் கட்கரி கூறினார்.

Tags :