Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சந்திரனின் தெளிவான புகைப்படம் இந்தியாவிடம் உள்ளது: இஸ்ரோ தலைவர் தகவல்

சந்திரனின் தெளிவான புகைப்படம் இந்தியாவிடம் உள்ளது: இஸ்ரோ தலைவர் தகவல்

By: Nagaraj Mon, 28 Aug 2023 11:16:57 AM

சந்திரனின் தெளிவான புகைப்படம் இந்தியாவிடம் உள்ளது: இஸ்ரோ தலைவர் தகவல்

திருவனந்தபுரம்: சந்திரனைப் பற்றிய மிகச்சிறந்த தெளிவான புகைப்படம் இந்தியாவிடம் உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.

நிலவில் எந்த நாடும் கால்பதிக்காத தென் துருவப் பகுதியில் சந்திரயான்-3 லேண்டரை இறக்கியது. அது வெற்றிகரமாக நிலவை ஆய்வு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது.

அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் செப்டம்பர் 3ம் தேதி வரை இயக்க முடியும் என்றும் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

moon,somnath,studies,time,photos ,நிலவு, சோம்நாத், ஆய்வுகள், அவகாசம், புகைப்படங்கள்

உலகில் வேறு எங்கும் கிடைக்காத நிலவின் மிகவும் நெருக்கமான படங்கள் கிடைத்திருப்பதாகவும், அவற்றை வெளியிடுவதில் சிறிய தாமதமாகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பூமியின் 14 நாட்கள் நிலவின் ஒருநாள் என்று கணக்கிடப்படுவதால் செப்டம்பர் 3 வரை அவகாசம் இருப்பதாகவும் அனைத்து ஆய்வுகளும் சிறப்பாக நடைபெற்று வருவதையும் சோமநாத் சுட்டிக்காட்டினார்

Tags :
|
|