Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகிலேயே கொரோனா மரண விகிதம் குறைவான நாடுகளில் இந்தியாவும் ஒன்று

உலகிலேயே கொரோனா மரண விகிதம் குறைவான நாடுகளில் இந்தியாவும் ஒன்று

By: Karunakaran Tue, 21 July 2020 11:56:40 AM

உலகிலேயே கொரோனா மரண விகிதம் குறைவான நாடுகளில் இந்தியாவும் ஒன்று

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 11 லட்சத்தை தாண்டி விட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 664 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 86 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 62.62 சதவீதமாக உயர்ந்துள்ளது.3 லட்சத்து 90 ஆயிரத்து 459 பேர் மட்டுமே கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

world,india,coronavirus,corona death ,உலகம், இந்தியா, கொரோனா வைரஸ், கொரோனா மரணம்

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் விகிதம் 2.46 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் உலக அளவில் கொரோனா மரணங்கள் குறைவான நாடுகளில் இந்தியாவில் ஒன்றாக உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நோயாளிகளை கண்டறிந்து, உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதும், கொரோனாவை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதும்தான் கொரோனா மரணம் குறைய காரணமாக அமைந்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் இணையவழியில் ஆலோசனை வழங்குவதும் மரணம் குறைய காரணமாக அமைந்ததாக கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|