Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நேபாளத்திற்கு ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களை இந்தியா வழங்கியது

நேபாளத்திற்கு ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களை இந்தியா வழங்கியது

By: Karunakaran Mon, 10 Aug 2020 09:46:32 AM

நேபாளத்திற்கு ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களை இந்தியா வழங்கியது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக நேபாளத்தில் மொத்தம் 22,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் இதுவரை 73 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக டாஷ்போர்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியா சார்பில் கொரோனா சிகிச்சைக்காக நேபாள நாட்டிற்கு வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டன.

india,ventilators,nepal,corona virus ,இந்தியா, வென்டிலேட்டர்கள், நேபாளம், கொரோனா வைரஸ்

நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அந்நாட்டுக்கு ரூ.2.8 கோடி மதிப்பிலான 10 வென்டிலேட்டர்கள் இந்தியா சார்பில் வழங்கப்பட்டது.

இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா வென்டிலேட்டர்களை வழங்க, நேபாள ராணுவ தலைமை அதிகாரி பூர்ண சந்திர தபா பெற்றுக் கொண்டார். இதுகுறித்து இந்திய தூதரகம் சார்பில் வெளியான அறிவிப்பில், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|