Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சியது இந்தி... ஐ.நா ஆய்வு தகவல்

மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சியது இந்தி... ஐ.நா ஆய்வு தகவல்

By: Nagaraj Wed, 19 Apr 2023 7:38:46 PM

மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சியது இந்தி... ஐ.நா ஆய்வு தகவல்

ஜெனிவா: சீனாவை மிஞ்சிய இந்தியா... ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம்(UNFPA) அமைப்பு 2023-ம் ஆண்டு உலக மக்கள்தொகையின் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா தாண்டி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தாண்டின் மத்தியில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட 30 லட்சம் கூடுதலாக இருக்கும். எனவே, தற்போதைய சூழலில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை தோராயமாக 142.86 கோடி மற்றும் சீனாவின் மக்கள் தொகை தோராயமாக 142.57 கோடி.

இந்தியாவில் கடைசியாக 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. பின்னர் 2021 ஆம் ஆண்டில் எடுக்கப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கோவிட் -19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. எனவே, இந்தியாவின் மக்கள்தொகையின் உறுதியான அதிகாரப்பூர்வ எண்ணிக்கை தெரியவில்லை. எனவே பல்வேறு தரவுகளை கருத்தில் கொண்டு ஐ.நா இந்த முடிவை வெளியிட்டுள்ளது.

china,india,number one,sum,world population , இந்தியா, உலக மக்கள், சீனா, தொகை, முதலிடம்

அதேபோல், உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கை இந்தியாவும் சீனாவும் கொண்டுள்ளது. இருப்பினும், இரு நாடுகளின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் சமீபத்திய ஆண்டுகளில் மெதுவாக உள்ளது. குறிப்பாக, சீனாவின் மக்கள்தொகை வளர்ச்சி பல ஆண்டுகளாக கணிசமாகக் குறைந்துள்ளது.

அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனா, கடந்த 20 ஆண்டுகளாக மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்கு கடுமையான விதிகளை இயற்றியுள்ளது. யாரும் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத சீனாவில், இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கட்டுப்பாடுகள் மக்கள் தொகை ஏற்றத்தாழ்வை உருவாக்கியுள்ளதால், மக்கள் மீண்டும் அதிக குழந்தைகளைப் பெறுவதை ஊக்குவிக்க சீன அரசாங்கம் சமீபத்தில் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Tags :
|
|
|