Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகின் மிகப்பெரும் பகுதிக்கு தடுப்பூசி வழங்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது - அசுத்தோஷ் சர்மா

உலகின் மிகப்பெரும் பகுதிக்கு தடுப்பூசி வழங்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது - அசுத்தோஷ் சர்மா

By: Karunakaran Mon, 05 Oct 2020 4:07:32 PM

உலகின் மிகப்பெரும் பகுதிக்கு தடுப்பூசி வழங்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது - அசுத்தோஷ் சர்மா

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கிடைப்பது சந்தேகம் தான். மேலும் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைப்பது கடினம்.

இந்நிலையில் டெல்லியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக வட்டமேஜை கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் அசுத்தோஷ் சர்மா பேசினார். அசுத்தோஷ் சர்மா பேசுகையில், இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் முக்கியமான கட்ட பரிசோதனைகளில் இருப்பதாகவும், உலக மனித குலத்தின் மிகப்பெரும் பகுதிக்கு தடுப்பூசி வழங்கும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாகவும் கூறினார்.

india,corona vaccine,world,ashutosh sharma ,இந்தியா, கொரோனா தடுப்பூசி, உலகம், அசுதோஷ் சர்மா

மேலும் அவர், அறிவியல் தொழில்நுட்பத்துறையில் சர்வதேச ஒத்துழைப்புக்கு இந்தியா அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கிறது. அந்தவகையில் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உலகின் 40-க்கு மேற்பட்ட நாடுகளுடன் உள்ளது என்று தெரிவித்தார். இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ரஷ்யாவில் கண்டிபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி அங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்பாகவே கொரோனா தடுப்பூசியை கொண்டுவர தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|