Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட இஸ்ரேலுக்கு இந்தியா அழைப்பு

ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட இஸ்ரேலுக்கு இந்தியா அழைப்பு

By: Nagaraj Wed, 10 May 2023 11:07:08 AM

ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட இஸ்ரேலுக்கு இந்தியா அழைப்பு

புதுடில்லி: இஸ்ரேலுக்கு அழைப்பு... இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபட இஸ்ரேலுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்யவும், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ராணுவத் தாளவாட உற்பத்தியில் ஈடுபடவும் இஸ்ரேலுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

india,indigenization,israel,cooperation,modern technology ,இந்தியா, உள்நாட்டு மயமாக்கல், இஸ்ரேல், ஒத்துழைப்பு, நவீன தொழில்நுட்பம்

இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் எரி கோஹன் சந்தித்துப் பேசினார்.

அப்போது, உள்நாட்டுமயமாக்கல் முயற்சியில் இந்தியாவின் முன்னுரிமை பற்றி ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். தொடர்ந்து, இந்தியாவிற்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, அதி நவீன தொழில்நுட்பங்களில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற இஸ்ரேல் அமைச்சர் கோஹன் விருப்பமும் தெரிவித்தார்.

Tags :
|
|