Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா ஒரு நாள் பாதிப்புகள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு 3வது இடம்

கொரோனா ஒரு நாள் பாதிப்புகள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு 3வது இடம்

By: Nagaraj Thu, 11 June 2020 09:48:56 AM

கொரோனா ஒரு நாள் பாதிப்புகள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு 3வது இடம்

இந்தியா தொடர்ந்து 3வது இடம்... உலக நாடுகளில் கொரோனா ஒருநாள் பாதிப்பு திடீரென கிடுகிடுவென உயர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஒருநாள் பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் இருந்து வருகிறது.

உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை 74,45,945 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,18,137 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 37,25,628 ஆகவும் உள்ளது. பெரும்பாலான உலக நாடுகளில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருந்தது.

corona,one day impact,india,3rd place,mexico ,கொரோனா, ஒரு நாள் பாதிப்பு, இந்தியா, 3வது இடம், மெக்சிகோ

பிரேசிலில் மட்டும் ஒரே நாளில் 33,100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் 20,674, இந்தியாவில் 12,375 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது. கொரோனா பாதிப்பில் ரஷ்யா 4-வது இடத்தில் இருந்து வருகிறது. ரஷ்யாவில் நேற்று மட்டும் 8,404 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.

சிலியில் 5,737, பெருவில் 5,087, பாகிஸ்தானில் 5,385 பேருக்கு கொரோனா உறுதியானது. செளதி அரேபியாவில் 3,717 பேருக்கும் வங்கதேசத்தில் 3,190 பேருக்கும் தென்னாப்பிரிக்காவில் 2430 பேருக்கும் ஈரானில் 2011 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

கொரோனா மரணங்களில் நேற்று மட்டும் பிரேசிலில் 1300 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் 982, இந்தியாவில் 388, இங்கிலாந்தில் 245, இத்தாலியில் 216 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் மிக அதிகமாக 596 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர்.

Tags :
|
|