Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிராந்திய அமைதிக்கு இந்தியா அச்சுறுத்தலாக இருக்கிறது - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

பிராந்திய அமைதிக்கு இந்தியா அச்சுறுத்தலாக இருக்கிறது - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

By: Monisha Thu, 28 May 2020 5:14:25 PM

பிராந்திய அமைதிக்கு இந்தியா அச்சுறுத்தலாக இருக்கிறது - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

அண்டை நடன பாகிஸ்தான் இந்திய எல்லையில் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. மேலும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் வீண் பழிகளை சுமத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியா மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்திய அரசு விரிவாக்க கொள்கைகள் என்ற பெயரில் அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. வங்காள தேசத்துடன் குடியுரிமை சட்டத்தின் வாயிலாகவும், சீனா மற்றும் நேபாளத்துடன் எல்லை மோதல்களாலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

pakistan prime minister imran khan,accused india,tweet,border dispute ,பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்,இந்தியா மீது குற்றச்சாட்டு,டுவிட்டர்,எல்லை மோதல்

மேலும் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதாகவும் பாகிஸ்தான் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

காஷ்மீரை சட்ட விரோதமாக தன்னுடன் இணைத்துள்ளது இந்தியா செய்துள்ள போர்குற்றமாகும். நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கும் மட்டுமின்றி பிராந்திய அமைதிக்கும் இந்தியா அச்சுறுத்தலாக இருக்கிறது. இவ்வாறு அவர் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

Tags :
|