Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊரடங்கை தளர்த்துவதால் ஆபத்தில் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடிப்பு

ஊரடங்கை தளர்த்துவதால் ஆபத்தில் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடிப்பு

By: Nagaraj Thu, 11 June 2020 09:48:43 AM

ஊரடங்கை தளர்த்துவதால் ஆபத்தில் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடிப்பு

இந்தியாவும் இருக்கிறது... ஊரடங்கு தளர்த்துவதால் ஆபத்தில் இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது

தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றினால் உலகம் முழுவதிலும் 71,72,874 பேர் பாதிக்கப்பட்டு 4,08,243 உயிரிழந்துள்ளனர். தொற்று பரவுவதை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வேலைவாய்ப்பு இல்லாமல் பொருளாதாரம் பாதிக்கப்படுவதினால் பல நாடுகளில் ஊரடங்கை தளர்த்தி மீண்டும் மக்கள் வேலைக்கு செல்ல வழிசெய்துள்ளனர்.

அதேபோல்தான் இந்தியாவிலும் உணவகங்கள், மால்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 1ம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்டதில் இருந்து தொற்றின் பாதிப்பு தினமும் 9,000க்கும் அதிகமாக உள்ளது.

india,curfew,danger,south africa,corona ,இந்தியா, ஊரடங்கு, ஆபத்து, தென் ஆப்பிரிக்கா, கொரோனா

இதனால் கடந்த ஒன்பது நாட்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.

இவ்வாறு உலகநாடுகள் ஊரடங்கை தளர்த்தி புதிய தொற்றை அதிகரிக்க வழி செய்யும் பதினைந்து ஆபத்து நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கும் இடம் உள்ளது. ஊரடங்கு தளர்த்துவதால் தொற்று பரவும் சூழல் உருவாகுகின்றது. இதனால் பாதிப்பு அதிகமாகி கடுமையான தடை விதிக்கும் சூழல் உருவாகும் என பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

45 அதிமுக்கிய பொருளாதாரங்களை ஈடுபடுத்தி இந்த பகுப்பாய்வு புதிய நிகழ்வுகளில் மக்களின் செயல்களை தீர்மானிக்க அவர்களின் போக்குகளை கணக்கில் எடுத்துக் கொள்கின்றது. அவர்களது இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:

india,curfew,danger,south africa,corona ,இந்தியா, ஊரடங்கு, ஆபத்து, தென் ஆப்பிரிக்கா, கொரோனா

"எச்சரிக்கை அறிகுறிகளுடன் இருக்கும் 13 நாடுகளும், இரண்டாவது அலை அச்சத்தில் இருக்கும் 15 நாடுகளும் ஆபத்தான மண்டலத்தில் இருக்கின்றன. ஊரடங்கை தளர்த்துவது சிக்கல்களை உருவாக்குகின்றது. ஒரு நாடு ஊரடங்கு தளர்த்தி மக்களின் நடமாட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றது இதனால் பொருளாதாரம் மேம்படும். ஆனால் தினமும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்வை சந்திக்கும்.

இதனை தொடர்ந்து மீண்டும் மக்களை வீட்டிற்குள் அடைக்கப்பட வேண்டிய சூழல் உருவாகும். மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு 45 நாடுகளை மூன்று குழுவாகப் பிரித்து அவை ஆபத்து மண்டலத்தில் அல்லது எச்சரிக்கை அறிகுறிகளை எதிர்கொள்ளும் மண்டலத்தில் இருக்கின்றன பாகிஸ்தான், இந்தோனேசியா, சிலி போன்ற குறைந்த நடுத்தர வருமானமுள்ள இந்தியாவும் ஆபத்து மண்டலத்தில் இருக்கின்றது.

இந்தக் குழுவில் சில மேம்பட்ட பொருளாதார நாடுகளான சுவீடன், சிங்கப்பூர், கனடா, தென் ஆப்பிரிக்காவும் உள்ளன. மேலும் அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், தென்கொரியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் ஆபத்தை எதிர்கொண்டு வருகின்றன என கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|
|