Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எரிசக்தி உற்பத்தியில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது - பிரதமர் மோடி

எரிசக்தி உற்பத்தியில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது - பிரதமர் மோடி

By: Karunakaran Fri, 27 Nov 2020 11:40:24 AM

எரிசக்தி உற்பத்தியில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது - பிரதமர் மோடி

டெல்லியில் ‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி-முதலீடு 2020’ மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியபோது, நாங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம். இவை ஆண்டுக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்தை உருவாக்கும். தற்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் உலக அளவில் 4-வது இடத்தில் இந்தியா உள்ளது. இதில், பிற முக்கிய நாடுகளுடன் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூறினார்.

தற்போது நாட்டில் 136 ஜிகாவாட்ஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் இது 220 ஜிகாபைட்ஸ் அளவாக அதிகரிக்கும். இந்தியாவின் தற்போதைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியானது நாட்டின் மின்சக்தி உற்பத்தியில் 36 சதவீத பங்களிப்பை செய்கிறது. மின்னணு உற்பத்தி துறையில் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது என மோடி கூறினார்.

india,energy production,modi,solar modules ,இந்தியா, எரிசக்தி உற்பத்தி, மோடி, சூரிய எரிசக்தி

மேலும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உயர்திறன் கொண்ட சூரிய எரிசக்தி தொகுதிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்துள்ளோம். இந்தியாவில் தொழில் செய்வதை எளிதாக்குவதை உறுதி செய்வதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. முதலீட்டாளர்களுக்கு வசதியாக ஒரு சிறப்பு திட்ட மேம்பாட்டு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் நமது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளோம் என தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மலிவாக இல்லாதபோதுகூட இதில் முதலீடுகள் செய்யப்பட்டன. தற்போது முதலீடுகளும், உற்பத்தி அளவும் உற்பத்தி செலவை குறைக்கின்றன. கடந்த 6 ஆண்டுகளில் இந்தியா ஈடு இணையற்ற பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகன்களுக்கும், தங்களுக்கு தேவையான முழுதிறனையும் பெற்றுக்கொள்ள வசதியாக உற்பத்தி திறனை பெருக்கி வருகிறோம் என நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார்.

Tags :
|
|