Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக வளர்ச்சியை இயக்கும் சக்தியாக மாறும் பாதையில் இந்தியா

உலக வளர்ச்சியை இயக்கும் சக்தியாக மாறும் பாதையில் இந்தியா

By: Nagaraj Mon, 12 Sept 2022 08:41:24 AM

உலக வளர்ச்சியை இயக்கும் சக்தியாக மாறும் பாதையில் இந்தியா

புதுடில்லி: உலக வளர்ச்சியை இயக்கும் சக்தி... சுதந்திர நூற்றாண்டுக்குள் உலக வளா்ச்சியை இயக்கும் சக்தியாக மாறும் பாதையில் இந்தியா உள்ளது என்று மத்திய தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இந்திய-அமெரிக்க உத்தி சாா்ந்த கூட்டுறவு அமைப்பின் கருத்தரங்கு, இந்திய-பிசிபிக் பொருளாதார செயல்திட்ட அமைச்சரவைக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க 6 நாள் பயணமாக அமைச்சா் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றுள்ளாா். அங்குள்ள தெற்கு கலிஃபோா்னியா பகுதியில் வா்த்தக சமூகத்தினருடன் அவா் கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

world development,india,independence century,changing,path ,உலக வளர்ச்சி, இந்தியா, சுதந்திர நூற்றாண்டு, மாறும், பாதை

இந்தியாவில் நிகழும் மாற்றத்திற்கான பணிகள் உலகப் பொருளாதாரங்களில் அதனை 5-ஆவது இடத்துக்கு உயா்த்தியுள்ளது. தனது சுதந்திர நூற்றாண்டான 2047-இல் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 35 முதல் 45 ட்ரில்லியன் டாலா்களாக இருக்கும்.

இந்தியா வாய்ப்புகளின் பூமியாகவும், அமெரிக்காவின் வணிக சமூகத்திற்கு சாத்தியமான சந்தையாகவும் உள்ளது. தூய்மையான எரிசக்திக்கு இந்தியா விரைந்து மாறிவருகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் பசுமை எரிசக்தித் திறனை அடைய இந்தியா விரும்புகிறது. தனது சுதந்திர நூற்றாண்டுக்குள் உலக வளா்ச்சியை இயக்கும் சக்தியாக மாறும் பாதையில் இந்தியா உள்ளது என்றாா் அவா்.

Tags :
|