Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மோடி உருவாக்கிய பேரழிவுகளில் இந்தியா சிக்கி தவிக்கிறது - ராகுல்காந்தி

மோடி உருவாக்கிய பேரழிவுகளில் இந்தியா சிக்கி தவிக்கிறது - ராகுல்காந்தி

By: Karunakaran Thu, 03 Sept 2020 8:13:05 PM

மோடி உருவாக்கிய பேரழிவுகளில் இந்தியா சிக்கி தவிக்கிறது - ராகுல்காந்தி


இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவ ஆரம்பித்தது முதலே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தொடர்ந்து அமலில் உள்ளது. இதனால் நாடு பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகிறது. மேலும் இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையின்மை அதிகரித்து கொண்டே செல்கிறது.

பொருளாதார மற்றும் மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு தொடர்ந்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதாலும், கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா ஆரம்பித்தது முதலே ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்.

india,catastrophes,modi,rahul gandhi ,இந்தியா, பேரழிவுகள், மோடி, ராகுல் காந்தி

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், மோடி உருவாக்கிய பேரழிவுகளில் இந்தியா சிக்கி தவிக்கிறது. ஜி.டி.பி. வீழ்ச்சி மைனஸ் 23.9 சதவீதம், 45 ஆண்டுகளாக இல்லாத வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர், ஜி.டி.பி. வீழ்ச்சி மைனஸ் 23.9 சதவீதம், 45 ஆண்டுகளாக இல்லாத வேலையில்லா திண்டாட்டம், 12 கோடி வேலை இழப்பு, மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை மத்திய அரசு தராதது, ஒருநாள் கொரோனா பாதிப்பில் உலகில் இந்தியா முதலிடம், எல்லைகளில் அன்னிய நாடுகளின் ஆக்கிரமிப்பு ஆகியவை அதற்கு உதாரணங்கள் என தெரிவித்துள்ளார்.

Tags :
|
|