Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா தான் உலக நாடுகளில் மிக வேகமான வளர்ச்சியை பெறப்போகிறது

இந்தியா தான் உலக நாடுகளில் மிக வேகமான வளர்ச்சியை பெறப்போகிறது

By: Nagaraj Fri, 17 Feb 2023 10:46:12 AM

இந்தியா தான் உலக நாடுகளில் மிக வேகமான வளர்ச்சியை பெறப்போகிறது

துபாய்: உலக நாடுகளில் மிக வேகமான வளர்ச்சியை இந்தியா தான் பெறப்போகிறது என்று அமெரிக்க முதலீட்டாளர் ரே டாலியோ தெரிவித்துள்ளார்.

துபாயில் நடந்த மாநாட்டில் பேசிய அமெரிக்க முதலீட்டாளர் ரே டாலியோ, வரும் ஆண்டுகளில் இந்தியா அதிக வளர்ச்சியை பதிவு செய்யும் நாடாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

துபாயில் நடந்த உலக நாடுகளின் உச்சி மாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரிட்ஜ்வாட்டர் அசோசியட்ஸ் நிறுவனர் ரே டாலியோ சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

அந்த மாநாட்டின் ‘அரசாங்கங்களும் உலகம் விடுவிக்கும் சவால்களும்’ என்ற கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர் முகமது பின் அப்துல்லா அல் கெர்காவியுடன் பேசிய டாலியோ இந்தியாவின் எதிர்காலம் குறித்து தனது கணிப்புகளை முன்வைத்தார்.

country,fastest,india,ray dalio:, ,அமெரிக்கா, துபாய், மாநாட்டில், ரே டாலியோ

இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. கடந்த 10 வருட ஆய்வுத் தரவுகளை அடிப்படையில் பார்க்கும்போது இந்தியா மிகப் பெரிய மற்றும் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை அடையப்போகிறது.

ஆசியாவின் வலுவான நாடாகவும் இந்தியா உருவெடுக்கும். உலகில் மற்ற நாடுகளைவிட மிகப்பெரிய மாற்றத்தை காணும் நாடாக இந்தியா இருக்கும்” என்று டாலியோ குறிப்பிட்டார்.

மேலும், எதிர்காலத்தின் “இந்தியாவின் முன்னேற்றம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்” என்றும் ரே டாலியோ கணித்துள்ளார். போர்களில் ஈடுபடாமல் விலகி இருக்கும் இந்தியா போன்ற நாடுகளின் முன்னேற்றம் அடையும் வாய்ப்பு உள்ளது” என்றும் டாலியோ தெரிவித்திருக்கிறார்.

Tags :
|