Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனநாயகத்தின் தாய் இந்தியா. அதில் பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன .. பிரதமர் மோடி பேச்சு

ஜனநாயகத்தின் தாய் இந்தியா. அதில் பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன .. பிரதமர் மோடி பேச்சு

By: vaithegi Fri, 14 Apr 2023 11:14:20 AM

ஜனநாயகத்தின் தாய் இந்தியா. அதில் பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன  ..  பிரதமர் மோடி பேச்சு

இந்தியா: இந்திய விடுதலையில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும், உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்வதாக பிரதமர் மோடி தெரிவிப்பு .... தமிழ் புத்தாண்டு விழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே இதை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில், தமிழ் புத்தாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் , பிரதமர் மோடி உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து இந்த விழாவில் விழாவில் பட்டு வேஷ்டி, சட்டையில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: “அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஜனநாயகத்தின் தாய் இந்தியா. அதில் பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அவற்றுள் தமிழ்நாட்டில் உத்திரமேரூரில் 1100-1200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டில் இந்தியாவின் ஜனநாயகம் பற்றிய பல விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன.

prime minister modi,india ,பிரதமர் மோடி,இந்தியா

மேலும் உலகின் பழமையான மொழி தமிழ், ஒவ்வொரு இந்தியனும் தமிழ் மொழி குறித்து பெருமைப்படுகின்றனர். சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையில் இருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரில் இருந்து கேப் டவுன் வரை, சேலமில் இருந்து சிங்கப்பூர் வரை, தங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைத் தம்முடன் சுமந்து சென்ற தமிழ் மக்களைக் காணலாம். பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், அவை உலகம் முழுவதும் கொண்டாப்படுகின்றன. பலமுறை பல சாதனை செய்த தமிழர்கள் பற்றி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி உள்ளேன்.

தமிழ் இலக்கியமும் அதிகமாக மதிக்கப்படுகிறது. தமிழரின் பண்பு பற்றி தமிழ்த் திரையுலகம் நமக்குச் சின்னச் சின்னப் படைப்புகளை வழங்கிவுள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது. ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் மொழியைப் பற்றிக் குறிப்பிட்டேன். ஏராளமானோர் குறுஞ்செய்தி மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்” என அவர் தெரிவித்தார்.

Tags :