Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா உலகின் புதிய உற்பத்தி மையமாகும்... பாக்ஸ்கான் நிறுவன தலைவர் திட்டவட்டம்

இந்தியா உலகின் புதிய உற்பத்தி மையமாகும்... பாக்ஸ்கான் நிறுவன தலைவர் திட்டவட்டம்

By: Nagaraj Fri, 08 Sept 2023 07:30:19 AM

இந்தியா உலகின் புதிய உற்பத்தி மையமாகும்... பாக்ஸ்கான் நிறுவன தலைவர் திட்டவட்டம்

தைபே: புதிய உற்பத்தி மையாகும்... உலகின் புதிய உற்பத்தி மையமாக இந்தியா உருவாகும் என ஃபாக்ஸ்கான் நிறுவனத் தலைவர் யங் லியூ தெரிவித்தார்.

தைபேயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகின் மிக முக்கியமான புதிய உற்பத்தி மையமாக மாறுவதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளும் இந்தியாவுக்குப் பிரகாசமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

manufacturing centers,india,tamil nadu,paxcon,company,review ,உற்பத்தி மையங்கள், இந்தியா, தமிழகம், பாக்ஸ்கான், நிறுவனம், பரிசீலனை

சீனாவைவிட இந்தியாவில் விநியோகச் சுற்றுச்சூழல் அமைப்பு வேகமாக வளர்ச்சி அடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் திட்டத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம், இந்தியாவில் மின்சார வாகனங்களைத் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மின்சார வாகன உற்பத்தி மையங்களை அமைக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் பரீசிலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|