Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா நல்ல நிலையில் உள்ளது-ஹர்சவர்தன்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா நல்ல நிலையில் உள்ளது-ஹர்சவர்தன்

By: Karunakaran Wed, 10 June 2020 1:55:49 PM

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா நல்ல நிலையில் உள்ளது-ஹர்சவர்தன்

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன்படி, வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், அலுவலகங்கள் போன்றவை கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.67 லட்சத்தை எட்டும் நிலையில் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிப்பை சந்தித்துள்ள நாடுகளில் 5-வது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,987 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கையும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட சம அளவில் உள்ளது. குணம் அடைந்தோர் சதவீதம், 48.47 சதவீதம் ஆகவுள்ளது.

fight against corona,india,harsawarden,coronavirus ,இந்தியா ,ஹர்சவர்தன்,

இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் கொரோனா தொடர்பான மத்திய மந்திரிகள் குழுவின் 16-வது கூட்டம், டெல்லியில் சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், கொரோனா பரவலுக்கு எதிரான ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வரும் நிலையில் மற்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட்டு, அதனால் காணப்படும் முன்னேற்றம் குறித்து விளக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய சுகாதார மந்திரி ஹர்சவர்தன், பொதுமக்கள் இன்னும் அதிக ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் எனவும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா நல்ல நிலையில் இருக்கிறது. ஆனால் அதில் மன நிறைவு அடைவதற்கு இடம் இல்லை எனவும் கூறினார்.

மேலும், ஆரோக்கிய சேது செயலியை நாடு முழுவதும் 12.55 கோடிப்பேர் பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது சுய ஆபத்து மதிப்பீட்டில் இது உதவியாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|