Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டும்

இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டும்

By: Nagaraj Fri, 18 Aug 2023 06:51:43 AM

இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டும்

ஒடிசா: அடிமை மனப்பாமையிலிருந்து விடுபட வேண்டும்... 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க அடிமை மனப்பான்மையில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

ஒடிசாவின் பூரியில் நடைபெற்ற என் மண், என் தேசம் நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். பின்னர், தோட்டக்கலை இயக்கத்தை தொடங்கி வைத்ததுடன், வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான உறுதி மொழியையும் ஏற்றுக்கொண்டார்.

sand sculpture,odisha,union minister,india,people,mood ,மணல் சிற்பம், ஒடிசா, மத்திய அமைச்சர், இந்தியா, மக்கள், மனநிலை

முன்னதாக பூரி ஜெகன்நாதர் ஆலயத்தில் நிர்மலா சீதாராமன் தரிசனம் செய்தார். அவருடன் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் வழிபாடு நடத்தினர்.

என் மண் என் தேசம் இயக்கத்தின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்ஷன் பட்நாயக்கால் உருவாக்கப்பட்ட மணல் சிற்பத்தை அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனும், தர்மேந்திர பிரதானும் பார்வையிட்டு ரசித்தனர்.

Tags :
|
|
|