Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா திட்டம்

ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா திட்டம்

By: Nagaraj Mon, 17 Apr 2023 10:38:48 AM

ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா திட்டம்

புதுடில்லி: கச்சா எண்ணெய் வாங்க திட்டம்... ஜி 7 நாடுகளால் வரம்பு விதிக்கப்பட்ட விலை அல்லது சற்று கூடுதலான விலைக்கு ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா திட்டமிட்டு உள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைக் கண்டித்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் பேரலுக்கு 60 டாலர் என விலை உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளன.

crude oil,g20 countries,india,russia,will buy ,கச்சா எண்ணெய், ஜி20 நாடுகள், இந்தியா, ரஷ்யா, வாங்கும்

இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் ஒபெக் கூட்டமைப்பு நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளதால் விலை உயரும் நிலை உள்ளது.

ரஷ்யாவிடமிருந்து 60 டாலருக்கு மேல் கூடுதல் விலைக்கு இந்தியா கச்சா எண்ணெய் வாங்குமா என்ற கேள்விக்கு வாஷிங்டனில் பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 140கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் பொருளாதார நிலவரத்தை கவனத்தில் கொள்வதும் அவசியம் என்றார். இந்தியா தனக்கு உகந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் என்றும் அவர் கூறினார்.

Tags :
|
|