போர் விமானங்களுக்காக என்ஜின்களை உள்நாட்டில் தயாரிக்க இந்தியா திட்டம்
By: Nagaraj Sat, 15 July 2023 4:56:40 PM
பிரான்ஸ்: இந்தியாவின் திட்டம்... போர் விமானங்களுக்கான எஞ்சின்களை உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியாவின் திட்டம் நிறைவேற உள்ளது.
பிரான்ஸின் SAFRAN மற்றும் இந்தியாவின் DRDO ஆகிய அமைப்புகள் கூட்டாக போர்விமான எஞ்சின்களைத் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
இதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை பிரான்ஸ் விமானத் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவுக்கு வழங்கும். இந்த ஆண்டின் இறுதிக்குள் இதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல இந்தியாவின் பன்முகப் பயன்பாட்டுக்கான கனரக ஹெலிகாப்டர்கள் எஞ்சின்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தையும் சாஃப்ரான் நிறுவனம் இந்தியாவுக்கு அளிக்க உள்ளது.
Tags :
contract |
india |