Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவிற்கு 6வது இடம்

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவிற்கு 6வது இடம்

By: Karunakaran Sat, 06 June 2020 11:43:43 AM

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவிற்கு 6வது இடம்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இந்தியாவில் மொத்தம் 236657 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதனால் இதுவரை 6642 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த கொரோனா வைரஸில் இருந்து இதுவரை 114073 பேர் குணமடைந்துள்ளனர்.

corona virus,india,italy,central health department ,கொரோனா வைரஸ்,இந்தியா,இத்தாலி,மத்திய சுகாதாரத்துறை

உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸ் காரணமாக, 68.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3.98 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 33.50 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

பிரேசில் இரண்டாவது இடத்திலும், ரஷியா மூன்றாவது இடத்திலும், ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் நான்காம் மட்டும் ஐந்தாம் இடத்தில் உள்ளன. இந்நிலையில் இத்தாலியை இந்தியா பின்னுக்கு தள்ளி 6-வது இடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு அடுத்து இத்தாலி 7-வது இடத்தில் உள்ளது.

Tags :
|
|