Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரசால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் இந்தியாவுக்கு 8-வது இடம்

கொரோனா வைரசால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் இந்தியாவுக்கு 8-வது இடம்

By: Karunakaran Fri, 19 June 2020 1:45:03 PM

கொரோனா வைரசால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் இந்தியாவுக்கு 8-வது இடம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 12,881 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 946 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பினால் புதிதாக 334 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 237 ஆக அதிகரித்துள்ளது. 1 லட்சத்து 94 ஆயிரத்து 325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் கொரோனா காரணமாக, 1 லட்சத்து 60 ஆயிரத்து 384 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

coronavirus,india,highest death,maharastra ,இந்தியா,கொரோனா,அதிக உயிரிழப்பு, மகாராஷ்டிரா,

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் விகிதம் 2.8 சதவீதத்தில் இருந்து 3.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் 4-வது இடத்தில் உள்ள இந்தியா, அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளது. முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

மகாராஷ்டிராவில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 752 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், அங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5,651 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52 ஆயிரத்து 334 ஆகவும், பலி எண்ணிக்கை 625 ஆகவும் உயர்ந்துள்ளது. 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் பாதிப்பு 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,904 ஆக உள்ளது.

Tags :
|