Advertisement

காற்றின் தரத்தில் ,,,,, இந்தியா கடைசி இடம்

By: vaithegi Wed, 08 June 2022 08:52:19 AM

காற்றின் தரத்தில் ,,,,, இந்தியா கடைசி இடம்

புதுடெல்லி: சுற்றுச்சூழல் தொடர்பான சட்டம் மற்றும் கொள்கைகளை வகுக்கும் யேல் மையம் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச புவி அறிவியல் தகவல் வலையமைப்பு மையம் சார்பில், 2022ம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு ஆய்வில் சுற்றுச்சூழல் செயல்பாடுகளுக்காக மதிப்பிடப்பட்ட 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா கடைசி இடம். காற்றின் தரம், கார்பன் உமிழ்வு போன்ற 40 வகையான அளவீடுகள் கொண்டு தரவரிசைப்படுத்தப்படும். அதன் படி தரவரிசைப்பட்டியில் இந்தியா கடைசி இடமான 180வது இடத்தில் உள்ளது என ஆய்வு கூறுகிறது.

air quality,carbon emissions,environment,greenhouse gases ,காற்றின் தரம், கார்பன் உமிழ்வு, சுற்றுச்சூழல், பசுமை இல்ல

அமெரிக்கா 43வது இடத்திலும், ரஷ்யா 112வது இடத்திலும் உள்ளன. சீனா 28.4 மதிப்பெண்களுடன் 161வது இடத்தில் உள்ளது. மியான்மர் (19.4), வியட்நாம் (20.1), வங்கதேசம் (23.1), பாகிஸ்தான் (24.6)போன்ற நாடுகள் இந்தியாவை விட அதிக மதிப்பெண் பெற்று முன்னிலையில் உள்ளன. இந்தியாவுக்கு மதிப்பெண் 18.9 மட்டுமே கிடைத்துள்ளது, இதற்கு இந்தியாவில் நிலவி வரும் பசுமை இல்ல வாயு உமிழ்வு அதிகரிப்பே முக்கிய காரணமாக இருக்க கூடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆய்வில் 2050ம் ஆண்டில் இந்தியா, சீனா இரு நாடுகளும் அதிகளவில் கார்பன் உமிழ்வை வெளியிடுவதில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் என ஆய்வு கூறுகிறது. மேலும் 2050ம் ஆண்டில் சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய 4 நாடுகள் உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வில் 50 சதவீதத்தை கொண்டிருக்கும். இதே நிலைமை தொடர்ந்தால் இந்தியா 2070ம் ஆண்டுக்குள் பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டுவது மிகவும் கடினமான செயல் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்

Tags :